இன்றைய காலத்தில் அதிக மக்கள் பாவனையை உடைய பிரபல இணைய உலாவியாக(Web browser) Google Chrome மாறியுள்ளது. இதற்குக் காரணம் இதன் இலகுவான பயன்பாடும், செம்மையான தொளில்பாடும் ஆகும். அதுமட்டுமல்லாது இணையதின் அரசனாக நடை போடும் Google நிறுவனத்தின் ஒரு வெளியீடே இந்த Google Chrome என்பதாலும் இதன் பாவனை ஏறிக்கொண்டே செல்கிறது. ஏனைய Browsers போல் இல்லாமல் Google Chrome தனக்கென்று சில விசேட அம்சங்களைக் கொண்டுள்ளதுடன் பல மென்பொருள்கள் செய்யக்கூடிய வேலைகளை இலகுவாக தன்னந்தனியாக செய்து முடித்து விடுகிறது அப்படியான 14 முக்கிய அம்சங்களைத்தான் இங்கே பட்டியலிடுகிறேன்.
1. உலாவியில் நாம் செய்யும் வேலைகளை சுட்டிக் காட்டும் Task Manager
google Chrome இல் ஒரு Task Manager இருப்பது உங்களுக்கு தெரியுமா? நமது Windows இல் Task manager ஐ பயன்படுத்த வேண்டுமாயின் இலகுவாக Alt+Ctrl+Delete ஐ அழுத்தி அதைப் பயன்படுத்துவோம். அதைப் போல் Google Chrome இல் Ctrl+Esc ஐ அழுத்தினால் போதும். உடனே Task Manager திறந்துவிடும். அதில் இப்போது நாம் என்ன என்ன வேலைகள் Browser இல் செய்கிறோம் என காட்டும்.
2. முக்கிய பக்கங்களை சேமித்து வைக்கும் Pin Tab
சில இணையத்தளங்களை நாம் அடிக்கடி பயன்படுத்துவோம்.ஒவ்வொரு முறை தேவைப்படும் போதும் அவற்றை ஆரம்பத்தில் இருந்து தேடி பார்ப்பது கடினமாக இருக்கும் அதனால் நாம் அப்படியான பக்கங்களை Pin Tab செய்து வைத்துக்கொண்டால் அவை மேலே மூலையில் சிறியதாக இருக்கும் தேவைப்படும் போது திறந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. Paste and Search
சில வேளைகளில் ஒரு சொல்லை அல்லது ஒரு வசனத்தை copy செய்து Google இல் Search செய்ய வேண்டிய தேவை ஏற்படும்.அப்படியான நேரங்களில் நாம் என்ன செய்வோம் ctrl+c மூலம் copy செய்து google Search Bar இல் ctrl+v ஐ கொடுத்து paste செய்து தேடிக்கொள்வோம். இதனை இலகுவாக்க paste and search வசதி உள்ளது. தேட வேண்டிய சொல்லை copy செய்த பின் search bar இல் சென்று right click செய்து paste and search ஐ கொடுத்தால் உடனே நாம் copy செய்த வசனத்தை google இல் search செய்யும்.
4. ஒரு வசனத்தை கூகுளில் தேட உதவும் Search Google for
இது மேலே சொன்ன Paste and Search ஐ விட மிகவும் இலகுவான ஒரு வசதி ஆகும். ஒரு இணையப் பக்கத்தில் நீங்கள் ஒன்றை வாசிக்கிறீர்கள் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு வசனத்தை உங்களுக்கு google இல் தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படியாயின் அந்த வசனத்தை select செய்து right click செய்தால் Search Google for என்று நீங்கள் select செய்த வசனத்தைக் காட்டும். இதை கிளிக் செய்தால் அந்த வசனத்தை புதிய tab ஒன்றில் தேடி முடிவைக் காட்டும். இது மிகவும் இலகுவான ஒரு வசதி ஆகும்.
5. வேகமான கணிப்பு முடிவுகள்
கடினமான கணித்தல் வேலைகளையும் சில வினாடிகளில் செய்து முடித்து விடைகளை காட்டுகிறது Chrome இன் Address bar. அநேகமான கணித்தல்களை செய்யும் வசதி இதில் உள்ளது. உதாரணமாக ஒரு வருடத்தில் உள்ள மணித்தியாலங்கள் எத்தனை என அறிய வேண்டுமாயின். 1 year in hours என்று type செய்தால் போதும் கண் சிமிட்டும் நேரத்தில் விடையை தேடாமலே காட்டி விடும். இதைபோல 10 km in cm என்று தேடினால் 10 கிலோமீட்டர்களில் உள்ள சென்றிமேட்டர்களை காட்டிவிடும்.
6. இரகசியமாக தேடும் Incognito mode
அதாவது ஒரு முக்கியமான விடயம் பற்றி இணையத்தில் பார்க்க வேண்டும் ஆனால் அந்த விடயம் யாருக்கும் தெரியக்கூடாது என்று எண்ணினால் இந்த incognito mode உங்களுக்கு உதவும். வழமையான முறையில் தேடும் போது நாம் தேடும் பக்கங்கள் அனைத்தும் history இல் சேமிக்கப்படும் அல்லது cookies இல் சேமிக்கபடும் இவ்வாரெல்லாம் சேமித்து வைப்பதனால் நாம் இல்லாத நேரத்தில் வேறு ஒருவர் வந்து நாம் என்ன என்ன வேலைகளை இணையத்தில் செய்தோம் என பார்த்துக் கொள்ளலாம்.ஆனால் இந்த incognito mode இதற்கு இடமளிக்காது. நீங்கள் எந்த பக்கங்களை தேடினாலும் அவற்றை எங்கும் சேமித்து வைக்காது.உங்கள் இரகசியம் பாதுகாக்கப்படும். Ctrl+Shift+N அழுத்தி இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
7. எத்தனை Tabs இருந்தாலும் இலகுவாக ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்லுதல்
நீங்கள் Chrome இல் எத்தனை tabs கள் திறந்து வைத்திருந்தாலும் ctrl உடன் ஒவ்வொரு இலக்கத்தையும் அழுத்தும் போது அந்த இடத்தில் இருக்கும் tab open ஆகி விடும்.
8. தவறுதலாக மூடிய tab ஐ மீண்டும் திறத்தல்
ஒரு பக்கத்தில் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாக அதை மூடி விட்டோம் என்றால் பரவாயில்லை. முன்பு போல் மீண்டும் முதலில் இருந்து தேடி எடுக்க தேவை இல்லை. இலகுவாக ctrl+shift+t ஐ அழுத்தினால் நாம் கடைசியாக close செய்த tab மீண்டும் open ஆகிவிடும்.
9. Image browser ஆக பாவிக்கலாம்
வழமையாக நாம் ஒரு image ஐ windows photo viewer இல் பார்ப்போம். இப்போது இந்த வேலையை chrome செய்கிறது. ஒரு படத்தை chrome இல் open செய்வதற்கு அந்த படத்தை இழுத்து chrome இல் விட்டால் போதும் உடனே அந்த படம் chrome இல் தெரியும்.
10. Note Pad ஆக பயன்படுத்தல்
chrome browser ஐ note pad ஆக பயன்படுத்த கீழுள்ள இந்த வரியை address bar இல் தேடினால் போதும்.உடனே வெறுமையான ஒரு பக்கம் தோன்றும் அதுதான் அந்த notepad.
data:text/html, <html contenteditable>
data:text/html, <html contenteditable>
11. டைனோசர் கேம் விளையாடுதல்
ஒரு பக்கத்தை நாம் தேடி அப்பக்கம் கிடைக்கவில்லை என்றால் "This webpage is not available" என்ற பக்கம் தோன்றும். அதில் ஒரு டைனோசர் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.அது ஒரு விளையாட்டு என்பது தெரியுமா?ஆம் அதை விடையாட ஆரம்பிக்க space சாவியை அழுத்துங்கள். உடனே அது ஓட ஆரம்பித்து விடும். ஒவ்வொரு முறை தடைகள் வரும் போதும் space ஐ அழுத்தினால் அந்த டைனோசர் பாயும். சிறு விளையாட்டாக இருந்தாலும் டைம் பாசாக இருக்கும்.
12. இணைய பக்கத்தில் இருந்து வரும் சத்தத்தை நிறுத்துதல்
சில வேளைகளில் நீங்கள் இணையத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சில பக்கங்களில் இருந்து சத்தம் வரும். அதை நிறுத்த தெரியாமல் இருந்திருக்கும். ஆனால் கூகிள் chrome இல் அதற்கு வசதி உள்ளது.
அது எந்த பக்கத்தில் இருந்து சத்தம் வருகிறது என்பதை சிறியதாக மேலே காட்டும் அதில் கிளிக் செய்தால் போதும் அந்த பக்கத்தில் இருந்து வந்த சத்தம் நின்று விடும்.
13. browser ஐ வேறு யாரும் பயன்படுத்தாமல் lock செய்து வைத்தல்.
இந்த link இற்கு சென்று "default" என்று உள்ளதை "Enabled" இற்கு மாற்றி relaunch now ஐ கொடுத்தால் இதை செயற்படுத்திக் கொள்ளலாம்.
http://cdn.techgyd.com/2015/09/mute-1024x576.jpg
http://cdn.techgyd.com/2015/09/mute-1024x576.jpg
14. mp3 player ஆக பயன்படுத்தல்
மேலே நாம் படங்களை chrome இல் open செய்வதற்கு பார்த்த அதே முறைகள் தான் இதற்கும். அப்படி ஒரு audio file ஐ இழுத்து chrome இல் விட்டால் அது play ஆகும்.



EmoticonEmoticon