எம்மைப்பற்றி

காலத்தின் தேவைக்கேற்ப நமது தொழில்நுட்ப அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாய சூழலில் வாழும் நாம் தினம் தினம் அவ்வாறான புதிய புதிய விடயங்களை அறிவதில் ஆர்வமாய் உள்ளோம். இந்த தளத்தில் நீங்களும் வாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் நீங்களும் அப்படியான ஒரு புதுமை விரும்பி என்பதில் ஐயமில்லை.

இவ்வாறான தகவல்களை அறிவதில் ஆர்வம் உள்ள போதிலும் அவற்றை அடைவதற்கு உதவும் நல்ல வழிகாட்டிகள் அரிது என்பதுதான் உண்மை. இதிலும் ஒரு விடயம் என்னெவென்றால் இணையத்தில் எதை படிக்க விரும்புகிறோமோ அதை இலவசமாகவோ பணம் செலுத்தியோ எம்மால் இலகுவாக கற்றுக்கொள்ள முடியும். இருந்தும் இணையத்தை, ஆளும் மொழி  ஆங்கிலம். ஆங்கில அறிவு உள்ளவர்களுக்கு இது ஒரு பிரச்சினை அல்ல விரும்பிய தளத்தில் விரும்பிய பாடத்தை அல்லது தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் நாம் தமிழை தாய் மொழியாய் கொண்டவர்கள். எம்மில் எல்லோரும் ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் கிடையாது. அப்படியாயின் இது நமக்கு ஒரு பாரிய சவால். எமது நோக்கம் தொழில்நுட்பம் கற்க வேண்டும் என்று சரியாக இருப்பினும் எமக்குரிய ஒரு சிறந்த வழிகாட்டி இல்லை என்றால் அவ்விடயத்தில் திறமை அடைவது சிறிது கஷ்டம் தான்.

ஆனால் முன்பிருந்ததை போல் இல்லாமல் இப்போது நிறைய தமிழ் தொழில்நுட்ப இணையதளங்களை காணக்கூடியதாய் உள்ளது. இருப்பினும் அவை எல்லாம் சிறந்த தளங்கள் என சொல்லி விட முடியாது. ஆங்கில தொழில்நுட்ப தளங்களுடன் ஒப்பிடுகையில் அவற்றின் தரம் கீழ்படிகிறது. இப்படியான எண்ணங்கள் என் மனதில் உதித்ததன் விளைவாக பூத்ததே இந்த தமிழ் வலைப்பூ.இது ஒரு சிறந்த தமிழ் தொழில்நுட்ப தளமாக மாறும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளேன்.