கணினியில் இருக்கும் தேவையற்ற வெறுமையான கோப்புகளை இலகுவாக நீக்குவது எப்படி?

2:41 AM
Delete all empty folders from computer- tamiltrickytips.blogspot.com

நமது கணினியில் ஏராளமான கோப்புக்களை(Folders) வைத்திருக்கிறோம். ஆனால் அவை எல்லாம் பயனுள்ள கோப்புகள் அல்ல. அவற்றில் சில வெறுமையான(Empty) கோப்புகளாக பதியப்பட்டிருக்கும். அனேகமாக ஒரு மென்பொருளை Install செய்யும் போதே இப்படியான  கோப்புகள் பதியப்படுகின்றன. இவை நமக்கு ஒரு பெரிய பிரச்சினையாக தெரிவதில்லை. இருந்தாலும் இப்படியான கோப்புகள் அதிகரிக்கும் போது அவை நமது கணினியின் வேகத்தை பாதிக்கும். கணினியில் இருக்கும் ஏராளமான கோப்புகளில் இப்படியான பயனற்ற வெறுமையான கோப்புகளை மட்டும் தேடி நீக்குவது என்பது இலகுவான காரியம் அல்ல. எனவே நாம் ஒரு சிறிய மென்பொருளை பயன்படுத்தி இந்த வேலையை இலகுவாகசெய்து கொள்ளலாம். அது எப்படி என்று இப்போது பார்ப்போம்.


படிமுறை 1: முதலில் இந்த வேலையை நமக்கு செய்யத் தேவையான மென்பொருளை இங்கே Download செய்து கொள்வோம். இதை கணினியில் Install செய்ய வேண்டிய அவசியம் இல்லை Downlaod செய்த பின் நேரடியாக Open செய்யலாம்.
படிமுறை  2:  Download செய்த பின் மென்பொருளை Open செய்து கணினியின் எந்த பகுதியில் உள்ள வெறுமையான கோப்புகளை கண்டறிய வேண்டும் என "Browse" கொடுத்து பின் "Find" பொத்தானை கொடுக்க வேண்டும்.

Delete all empty folders from computer- tamiltrickytips.blogspot.com

படிமுறை  3: இது நீங்கள் கொடுத்த அந்த பகுதியில் உள்ள அனைத்து வெறுமையான கோப்புக்களையும் உங்களுக்கு பட்டியலிட்டுக் காட்டும். இதில் நீக்க வேண்டிய மென்பொருள்களை மட்டும் "சரி" அடையாளப்படுத்தி  "Delete" பொத்தானை கொடுத்தால் முடிந்தது.

Delete all empty folders from computer- tamiltrickytips.blogspot.com

இப்போது நீங்கள் சொன்ன அத்தனை வெறுமையான கோப்புக்களையும் கன நேரத்தில் அழித்து விடும். இப்படியே உங்களுக்கு வேறு எந்த எந்த பகுதியில் உள்ள கோப்புகளை அளிக்க வேண்டுமோ அதை தெரிவு செய்து இலகுவாக அத்தனை கோப்புகளையும் ஒரே சொடுக்கில் அழித்து விடலாம்.இனியும் வெறுமையான கோப்புகளை சேர்த்து வைத்து கணினியின் செயற்பாடை பாதிக்க தேவை இல்லை.

குறிப்பு  : சில வெறுமையான கோப்புக்கள் சில வகையான மென்பொருற்களை இயக்குவதற்கு தேவைப்படும். எனவே "Delete" கொடுக்கும் முன்பு அப்படியான தேவையான கோப்புக்கள் உள்ளனவா என பார்த்துக் கொள்வது நல்லது.

பதிவை பகிர்ந்துகொள்ள -

தொடர்புடைய பதிவுகள்

First